Nithya Poojai (நித்திய பூஜை)


1. இவ்வாலயத்தில் இரண்டு கால பூஜையாக காலை சந்தி 8 மணி அளவிலும், மாலை சந்தி 6 மணி அளவிலும் நடைபெறுகிறது.

2. ஒவ்வொரு வாரம் திங்கள் அன்று மாலை இறைவனுக்கு ருத்ரதிரிசதி அர்ச்சனை நடைபெறும்.

3. வியாழன் அன்று குரு மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை நடைபெறும்.

4.வெள்ளியன்று காலை ராகு காலத்தில் காளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைக்கும் பேச்சு வராத, சித்தம் கலங்கி, கல்வியில் தேர்ச்சி பெற, திக்குவாய் மற்றும் சிறுபிள்ளைகளின் நோய் தீர சிறப்பு அர்ச்சனையோடு இஞ்சி கலந்த தேன் பிரசாதம் வழங்கப்படும். மாலை ஸ்ரீகுங்குமவல்லிக்கு லலிதா திரிசதி குங்குமம் அர்ச்சனை நடைபெறும்.

சனிக்கிழமை

சனீஸ்வரர் தம்பதி வாகனத்துடன் வீற்றிருப்பதால் பரிகார பூஜையில் சிறந்து விளங்குவதாலும் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. எள்ளு முடிச்சு நல்லெண்ணெய் தீபம் போடுவது சிறப்பு.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராகு காலத்தில் பிரத்யங்கிராதேவிக்கு அபிஷேகம் அர்ச்சனை நடைபெறும்.