Monthly Pooja (மாதாந்திர பூஜை)

ஒவ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோச பூஜைகளும், பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கோவிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் தில்லைக்காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்ப மரத்தடியில் பதுவாக ( உருவமற்ற நிலையில் ) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்களால் பொங்கலிட்டு சில பலிகள் என இடுவது என குடிபாட்டு தெய்வமென வழிபட்டு வந்தனர் . நாளடைவில் கால சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது. அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோவில் கட்டி பாதாளகாளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லைக்காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்பு மிக்க ஆலயத்தில் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். ( அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாளகாளி, இப்புவனம் காக்கும் புவனமாதா தில்லைகாளி, ஆகாயகாளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள்.

பாதாளம் முதல் ஆகாயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும்.அமாவாசையன்று மட்டும் தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். தில்லைகாளிக்கு அருகில் ஜெயகாளி சன்னிதியும் உள்ளது.ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கிரா, தஷ்ணகாளியும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு அமாவாசையன்று காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல் வராத கடன் திரும்ப வருதல் செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றிற்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபம் ஏற்றுவோர் கூட்டம் ஒவ்வொரு அமாவாசை அன்று கோயிலில் காணலாம். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் வாய்பேறு இல்லாத குழந்தைக்கு திக்குவாய், சரளமாக பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாட்பட்ட வியாதிகளுக்கு தீராத பிரச்சனைகளுக்கு, ஜெயகாளிக்கு குருதி அபிஷேகமும் இரத்த புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.

அஷ்டமி பூஜை

சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக்கூடியவர் இன்றும் கடைசியாக பைரவர்க்கு பூஜை நடத்தி ஆலயத்தின் சாவி வைத்து பூஜித்து எடுத்து செல்வது சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். ஏனைய ஆலயங்களில் ஒரு பைரவர் மட்டும் தான் இருப்பார். இவ்வாலயத்தில் மட்டும் தான் சிறப்பாக அஷ்டபைரவர் தமது மனைவி மற்றும் வாகனத்துடன் சிறப்பாக காட்சி தருகிறார்.

சொர்ண பைரவர்

பைரவர் திரு உருவத்தை பழங்காலம் தொட்டு அறிந்து இருந்தாலும் இந்த சொர்ண பைரவர் திரு உருவத்தைக் கண்டறிவது அரிது (கடினம் ). குறிப்பிட்ட சில ஆலயங்களில் இந்த சொர்ண பைரவர் திருமேனி பைரவர் திருமேனி உள்ளது.
இவ்வாலயத்தில் மட்டும் தான் 4 1/2 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் பொன்குடம் ஏந்தி சொர்ணதேவியை அணைத்தவாறு மக்கள் கேட்க கூடிய வரங்களையும் பொன்,பொருள் தரக்கூடிய நிலையில் சொர்ண பைரவர் கல்விக் கரமாக எழுந்து அருளியுள்ளார். இவ்வாலய தேய்பிறை அஷ்ட பூஜை சிறப்பு வாய்ந்தது. அஷ்டமி தினம் அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷீண பைரவர், காலபைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களும் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை நடைபெறும். பூசணிதீபம், மிளகுமுடிச்சு தீபம், தேங்காய் தீபம், செல்வம் பெறுக தாமரை தண்டு திரி தீபம், எதிரிகள் அழிய இலுப்பை எண்ணையில் வாழைத்தண்டு தீபம், நினைத்த காரியம் நடக்க முழு முந்திரிபருப்பு மாலை சாற்றுதல், எதிரி அழிய மிளகினால் ஹோமம். கோர்ட் வழக்கு, சொத்து பிரச்னை தீர்வு வியாபார அபிவிருத்தித்திக்காக சிறப்பாக நடைபெறும்.

அஷ்டபைரவர் பரிகாரம் நவக்கிரக பரிகாரம்

ஒவ்வொரு பைரவருக்கும் அதிதேவதை பிரத்யோக தேவதை உண்டு. அதன்படி நவக்கிரகத்தின் தோஷத்தை நீக்கும் வகையில் அஷ்டபைரவருடன் நவபைரவர் சொர்ண வைரவரும் சேர்ந்து நலபைரவராக நவகிரகத்தின் ஏற்படக்கூடிய தோஷத்தை நீக்குகிறார். இவ்வாறு மாதந்தோறும் அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தை மாதம்

தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வளைகாப்பு திருவிழா நடைபெறும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடையவும், சந்தானபாக்கியம் வேண்டிதம்பதிகளும், திருமண தடை அகல கன்னி பெண்களும், சுமங்கலிகளின் மாங்கல்ய பலம் பெறவும் கலந்து கொள்வது நல்லது. தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று ப்ரித்தியங்கரா தேவிக்கு சண்டி ஹோமம் நடைபெறும்.

மாசி

சிவராத்திரி முன்னிட்டு சுவாமிக்கு ஆறுகால அபிஷேகம், அர்ச்சனை நடைபெறும்.

பங்குனி

உத்திரத்தன்று முருகனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும். அதே மாதத்தில் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விவாகம் நடைபெற வேண்டி கன்னி பெண்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது நல்லது.

சித்திரை

சித்ரா பவுர்ணமி பூஜை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் நடைபெறும். சந்தான பாக்கியம் வேண்டுவோர் இந்த யாகத்தில் கலந்து கொள்வது நல்லது. காளிக்கு பால்குடம், தீர்த்தகுடம், காவேரி ஆற்றிலுருந்து எடுத்து வரப்படும். காளிக்கு பூச்சொரிதல் இம்மாதத்தில் நடைபெறும்.

வைகாசி

விசாகம் முருகனுக்கு பூஜை

ஆனி

நடராசருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி

ஆடி புரத்தை முன்னிட்டு காளிக்கு சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெறும்.

ஆவணி

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஹோமம், பூஜை, சந்தன காப்பு சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி

நவராத்திரியை முன்னிட்டு காளி அம்மனுக்கு ஒன்பது நாளும் சண்டி ஹோமம். சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும். காளிக்கு சாற்றப்பட்ட 108 புடவை ஒன்பது நாலும் பிரசாதமாக பிரித்து வழங்கப்படும்.

ஐப்பசி

இறைவன் பெரிய லிங்கதிருமேனி கொண்டு இருப்பதால் அன்ன அபிஷேகம் நடைபெறும். காண்பது மனதுக்கு நிறைவு மற்றும் சந்தோஷத்தையும் அளிக்கும்.

கார்த்திகை

ஒவ்வொரு சோம வாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். நான்காவது வாரம் சங்கு அபிஷேகம் நடைபெறும்.

மார்கழி

தனுர் மாத பூஜை முன்னிட்டு காலை 5 மணிக்கு பூஜை நடைபெறும். இந்த மாதத்தில் வளைகாப்பு வைபோகத்தை முன்னிட்டு 48 நாட்கள் ஹோமம் பூஜை திரிசதி தொடங்கப்படும். 48 வது நாளாக வளைகாப்பு நடைபெறும்.