About Us
சிறப்பு மிக்க இவ்வாலயத்தை எனது முன்னோர்கள் பராமரித்து வந்தனர்.
1. சகாதேவன்பிள்ளை - 1877 முடிய அவர்களால் தொடர்ந்து
2. அப்பாதுரைபிள்ளை - 1877 முதல் 1907 அவர்களை தொடர்ந்து
3. காந்திமதி அம்மாள் - 1907 முதல் 1947 அவர்களை தொடர்ந்து
4. காமாட்சி அம்மாள் - 1947 முதல் 1954 அவர்களை தொடர்ந்து ( 19.11.1954 )
5. கண்ணுசாமிபிள்ளை - 24.09.54 முதல் 20.08.62 அவர்களை தொடர்ந்து
6.கே. அப்பாதுரைபிள்ளை - 20.08.62 முதல் 20.08.95 அவர்களை தொடர்ந்து
7. அ. கருணாமூர்த்திபிள்ளை - 20.08.95 முதல்
சிறப்பும் பொலிவும் மிக்க இவ்வாலயத்தை முன்னோர்கள் பொலிவு மாறாமல் பாதுகாத்து வந்துள்ளனர். அதைபோல் நானும் எனது சந்ததியினரும் இதே போல் பாதுகாத்து வர இறைவன் ஆசியோடு உங்கள் ஆதரவையும் நாடுகின்றோம். இங்ஙனம் என்றும் இறைபணியில்
அ. கருணாமூர்த்திபிள்ளை
பரம்பரை அறங்காவலர்
94429 02414, 94860 52222
முன்னுரை
திருச்சி உறையூரில் மிகமிக சிறப்பும் கொண்டது. திருதான்தோன்றீஸ்வரர் ஆலயம். இவ்வாலயம் சாலையில் இருந்து சற்று உள்ளடக்கி இருப்பதாலும் பெரிய இராஜகோபுரம் இல்லாமையினால் பொதுமக்கள் இவ்வாலயத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.ஸ்தல வரலாறு
உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் இந்திரனின் அனுமதி யோடும் நாகராஜனின் ( அனுமதியுடன் ) நாகக்கன்னிகளின் ஒருவலான காந்திமதி என்பவளை மணந்தார். நாககன்னியான காந்திமதி சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். திருச்சியில் மலையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரை வழிபட்டு வந்தார். இறை வழிபாடு செய்ய சாரமாமுனிவர் பூப்பறிக்கும் நந்தவனத்தின் ஒற்றையடி பாதையின் வழியாக சென்றார். ( இன்றும் இவ்விடத்தை நந்தவனம் என்றே அழைக்கின்றனர்). அச்சமயம் வெயிலின் தாக்கம் மிகுந்து இருந்ததாலும் உடல் சோர்வுற்று நிறைமாத கர்ப்பிணியாக காந்திமதி ஓரிடத்தில் அமர்ந்து இறைவா உன்னை இன்று என்னால் தரிசிக்க இயலாமல் போய்விடுமோ என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார். கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் பக்திக்கு இறங்கி திருச்சிரார்மலை இறைவன் தானாக வந்து ரிஷபாரூடராக காட்சி தந்தார். உடன் மகப்பேறு காலம் வரை நீ எமை இங்கே தரிசிக்கலாம் என்று கூறி அருள் செய்தார். திருச்சிரார்மலை இறைவன் போல் பெரிய லிங்க திருமேனியுடன் இங்கே காட்சி அளிக்கிறார். இவ்வாறு நாககன்னி வழிபட்ட ஆலயம் தான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம். இப்புராண சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பர்தாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றிஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு என்றும், ஐந்து விதமான சித்தாரங்கள் நைவேதினம் செய்தும், லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு என மங்கள பொருட்களை அம்பிகைக்கு சாற்றி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், திருமண தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இவ்வருள் பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும்.
2ம் நாள் சந்தான் பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிக்கையாக காட்சி அளிக்கின்றாள் சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கு முதல் நாள் சாற்றிய வளையல் பிரசாதமாக வழங்கப்படும்.
3ம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவரை தரிசனம் செய்தால் மணமாகாத ( ஆண், பெண் ) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் பெண்கள் அம்பாளை தரித்தால் தங்கள் மாங்கல்யம் பலம் பெறவும், தீர்க்க மாங்கல்ய இருக்கவும் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி செல்வார்கள்.